கமல்ஹாசனின் 11வது அவதாரத்திற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல வார இதழ் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொடர் எழுதி வருவது தெரிந்ததே. அதில் இந்த வாரம் 'முன்பெல்லாம் இந்து வலது சாரியினர் மற்ற மதத்தை சார்ந்தவர்களுடன் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல், வாத பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். இந்த சூழ்ச்சி தோற்க ஆரம்பித்தவுடன் தற்போது அவர்களும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். எங்கே ஒருஇந்து தீவிரவாதியை காட்டுங்கள் என்று இனி அவர்கள் சவால் விட முடியாது. வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய் வலிமை வெல்லும் என்ற நம்பிக்கை அனைவரையும் காட்டுமிராண்டிகளாக்கிவிடும்' என்று கமல் கூறியுள்ளார்
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் ஏற்கனவே விஸ்வரூபம் படத்தின் மூலம் யார் தீவிரவாதிகள் என்பதை புரிந்து கொண்டு நாட்டை விட்டே போகப்போகிறேன் என்று கூறியவர். ஏற்கனவே 'தசாவதாரம்' என்ற படத்தில் பத்து அவதாரம் எடுத்த கமல், தற்போது 11வது அவதாரமாக இடதுசாரி அவதாரம் எடுத்துள்ளார். ஒரு இடது சாரியின் பார்வையில் இந்து தீவிரவாதம் என்று அவர் தவறாக கருத்து கூறியுள்ளார். எனவே கமல்ஹாசனுக்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்வதோடு, கமல் தான் கூறியதை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்' என்று கூறினார்.
ஏற்கனவே கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout