இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி கொரோனாவால் தென்னாப்பிரிக்காவில் மரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து மனித உயிர்கள் பலியாகி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி கீதா ராம்ஜி கொரோனாவால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சர்வதேச அறிவியல் ஆய்வு உலகில் அனைவராலும் போற்றப்பட்டு வந்தவர் கீதா ராம்ஜி. வைரலாஜி தொடர்பாக பல நூல்களை எழுதியுள்ள கீதா ராம்ஜி. ஹெச்.ஐ.வி. தடுப்பு தொடர்பான ஆய்வுக்கான சர்வதேச அளவில் வாழ்நாள் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி பேராசிரியராக இருந்து பலரது ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கீதா ராம்ஜி லண்டன் பயணம் மேற்கொண்டு அதன்பின்னர் மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவால் ஹெச்.ஐ.வி. தடுப்பு ஆய்வுகளுக்கு பெரும் பின்னடைவு என்று சக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Gutted. A kind person, a stellar vaccine scientist, a "towering HIV prevention research leader," someone who dedicated her life to ending the HIV pandemic, has died of Covid-19. Prof. Gita Ramjee was Chief Specialist Scientist + Director of the South African Medical Research... pic.twitter.com/SNiACexmSq
— Dr. Seema Yasmin (@DoctorYasmin) March 31, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments