மருமகளுக்காக விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் தந்தையின் முக்கிய கோரிக்கை: அரசு பரிசீலிக்குமா?

சமீபத்தில் துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் ஒன்று தரை இறங்கிய போது திடீரென விபத்துக்குள்ளானது என்பது தெரிந்ததே. இந்த விமான விபத்தில் கேப்டன் டிவி சாதே மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகினர்.

இந்த நிலையில் துணை விமானி அகிலேஷ் குமாரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவருக்கு இன்னும் இரண்டு வாரங்களில் குழந்தை பிறக்கும் என்றும் செய்திகள் வெளியானது. இன்று காலை அகிலேஷ் குமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதும் உள்ளூர் பிரமுகர்கள் பலர் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அகிலேஷ் குமாரின் தந்தை ’தனது மருமகள் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கும் அவருடைய குழந்தையின் வாழ்வாதாரத்திற்கும் உதவியாக இருக்கும் வகையில் தனது மருமகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.