மாஸ்க் அணிவதும் அணியாமல் இருப்பதும் அவருடைய விருப்பம்… கெத்துக் காட்டும் வெள்ளை மாளிகை!!!

 

கொரோனா நோய்த்தொற்று உலக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி, முறையான சிகிச்சை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. நோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி சமூக விலகலைக் கடைபிடிப்பது என விஞ்ஞானிகள் பரிந்துரை செய்கின்றனர். சமூக விலகலுக்கு மாஸ்க், கையுறை, கிருமிநாசினிப் பொருட்களை பயன்படுத்துமாறு மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். உலகில் பெரும்பலான நாடுகளில் இது கட்டாய விதிமுறைகளாக மாற்றப் பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்ததில் இருந்தே மாக்ஸ் அணிவதை தவிர்த்து வருகிறார். இதுகுறித்து பலமுறை அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதில் அளித்த அவர் நோய்க் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ்க்குகளை அணியுமாறு பரிந்துரைக்கிறார்கள். அதை நான் நாட்டு மக்களுக்கு சொல்கிறேன். ஆனால் நான் மாஸ்க்கை அணியமாட்டேன் எனத் தெரிவித்து இருந்தார். இதுவரை எந்த செய்தியாளர் சந்திப்பிலும் அவர் மாஸ்க்கை அணியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அதிபர் பதவிக்கான பிரச்சாரங்கள் அமெரிக்காவில் களைக் கட்டி வருகிறது. பிரச்சாரக் கூட்டங்களிலும் அதிபர் மாஸ்க் அணியாமல் நடமாடி வருகிறார். இதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப் பட்டு வரும் நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லி, “மாஸ்க் அணிவது ட்ரம்ப்பின் தனிப்பட்ட விருப்பம். மாஸ்க் அணிவது, அணியாதது தனிநபரின் விருப்பம். மக்கள் அவர்களது பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிவதை ட்ரம்ப் ஆதரிக்கிறார். மேலும் அவர் மாஸ்க் அணிவதில் எந்தப் பிரச்சனையும் தனக்கு இல்லை என்று என்னிடம் கூறினார்” என விளக்கம் அளித்து இருக்கிறார்.

கடந்த 2016 இல் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிபர் ட்ரம்ப் தற்போது இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. வருகிற நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப் பட்டு இருக்கும் ஜோ பிடனுக்கும் தற்போதைய அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையில் அடிக்கடி விமர்சனப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அதிபர் பதவிக்கான போட்டி கடுமையாக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

More News

கொந்தளித்த ரஜினிகாந்த்: கோபத்துடன் புகைப்படம் வெளியீடு

சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு அங்கு அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு காரணமாக தமிழகமே கொந்தளித்துப் போயுள்ளது

ஜெயராஜ் கடைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தும் சிபிசிஐடி டி.எஸ்.பி: தாமாக முன்வந்து தகவல்களை தரும் வியாபாரிகள்

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில்

நெய்வேலி லிக்னசைட் ஆலையில் ஏற்பட்ட விபத்து!!! 17 பேர் காயம் மற்றும் பரபரப்பு தகவல்கள்!!!

நெய்வேலி லிக்னைட் ஆலையில் 2 ஆம்  நிலையில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா மருந்து: நாங்க அப்படி சொல்லவே இல்லையே… பல்டி அடித்த பதஞ்சலி நிறுவனம்!!!

7 நாட்களில் கொரோனா நோய்த்தொற்றை குணமாக்கும் ஆயுர்வேத மருந்து கிட்டை பதஞ்சலி நிறுவனம் கடந்த ஜுன் 23 ஆம் தேதி வெளியிட்டது.

கட்டாயக் கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு காப்பர்-டி, என சிறுபான்மையினரை வதைக்கும் சீன அரசு!!!

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாகவே மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.