ஹிருத்திக் ரோஷனின் அடுத்த படத்தில் கவுதம் மேனன் நாயகி

  • IndiaGlitz, [Monday,February 08 2016]

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் பூஜாஹெக்டேவுடன் இணைந்து Mohenjo Daro என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். Ashutosh Gowariker இயக்கி வரும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ள நிலையில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.


ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் Kaabil என்று வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொமண்டிக் த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக யாமி கவுதம் நடிக்கவுள்ளார். இவர் 'கவுதம் மேனன்' தயாரிப்பில் தயாரிக்கப்பட்டு வரும் 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகேஷ் ரோஷன் தயாரிக்கும் இந்த படத்தை சஞ்சய் குப்தா இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.