close
Choose your channels

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த பட டைட்டில்-இயக்குனர் குறித்த தகவல்

Thursday, February 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் வரிசையில் ஹீரோ அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் நடித்த 'மீசையை முறுக்கு திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இதனையடுத்து இவர் தற்போது நடித்து வரும் திரைப்படமான 'நட்பே துணை' திரைப்படமும் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஆதி, அனெகா, கரு. பழனியப்பன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆதி நடிக்கவிருக்கும் அடுத்த பட இயக்குனர் மற்றும் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் ராணா என்பவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'முரட்டு சிங்கிள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.

'மீசையை முறுக்கு', 'நட்பே துணை' ஆகிய படங்களை தயாரித்த சுந்தர் சி- குஷ்பு தம்பதியின் அவ்னி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment