ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த பட டைட்டில்-இயக்குனர் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Thursday,February 28 2019]

கோலிவுட் திரையுலகில் விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் வரிசையில் ஹீரோ அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் நடித்த 'மீசையை முறுக்கு திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இதனையடுத்து இவர் தற்போது நடித்து வரும் திரைப்படமான 'நட்பே துணை' திரைப்படமும் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஆதி, அனெகா, கரு. பழனியப்பன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆதி நடிக்கவிருக்கும் அடுத்த பட இயக்குனர் மற்றும் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் ராணா என்பவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'முரட்டு சிங்கிள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.

'மீசையை முறுக்கு', 'நட்பே துணை' ஆகிய படங்களை தயாரித்த சுந்தர் சி- குஷ்பு தம்பதியின் அவ்னி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபுதேவாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா நடித்த 'சார்லி சாப்ளின் 2' திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படமான 'தேவி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது...

'நீயா 2' சென்சார் தகவல்கள்

இந்த நிலையில் தற்போது 'நீயா 2' என்ற திரைப்படம் உருவாகி, ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து தற்போது சென்சார் சான்றிதழும் பெற்றுவிட்டது...

எல்.கே.ஜி வெற்றியால் பயனடைய போகும் கஜா பாதித்த பகுதிகள்

ஆர்.ஜே.பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்த 'எல்.கே.ஜி. திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது...

ஆர்யாவுக்கு விடை கொடுத்து அனுப்பிய 'காப்பான்' படக்குழு!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த 'காப்பான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில்

என்னாலும் வாக்குகளை பிரிக்க முடியும்: கருணாஸ் ஆவேசம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் சசிகலா, தினகரன், திமுக என மாறி மாறி ஆதரவு கொடுத்து கொண்டிருந்த நடிகரும் எம்.எல்.வுமான கருணாஸ்