ஹிப் பாப் ஆதி நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது.....!

  • IndiaGlitz, [Friday,August 20 2021]

நடிகர் ஆதி நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் வந்து தமிழ் திரையுலகில் சாதனை படைத்த பல கலைஞர்களில் ஹிப்பாப் ஆதியும் ஒருவர். இண்டிபென்டண்ட் ஆர்ட்டிஸ்ட்-ஆக தன் கெரியரை துவங்கிய ஹிப் பாப் ஆதி, தற்போது முன்னணி இசையமைப்பாளராகவும், பிரபல நடிகராகவும் வலம் வருகிறார். சிவகாமி சபதம் என்ற திரைப்படத்தை இயக்குவதோடு, நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் அந்த படத்திற்கு பின் மரகத நாணயம் பட இயக்குனர் இயக்கவுள்ள, புதிய திரைப்படத்தில், நடிக்கவுள்ளார் ஆதி. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான முதற்கட்ட பணிகளை படக்குழு துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.