ஓடிடியில் வெளியாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்தபடம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா நடித்து முடித்துள்ள அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’சிவகுமாரின் சபதம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள அடுத்த திரைப்படமான ’அன்பறிவு’ என்ற படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக இரட்டை வேடத்தில் ஹிப்ஹாப் தமிழா இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நெப்போலியன், விதார்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அஸ்வின் ராம் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’அன்பை பெருக்கி, அறிவை விதைத்து, குடும்பத்துடன் கொண்டாடி மகிழ, உங்களின் பேராதரவுடன் ’அன்பறிவு’ நமது ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது என அறிவித்துள்ளது. இந்த படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Anbai perukki, Arivai vithaithu, kudumbathudan kondaadi magizha, ungalin peraadharavodu #Anbarivu namadhu @DisneyPlusHS -il #AnbarivuOnHotstar #DisneyPlusHotstarMultiplex #SambavamStarts@HipHopTamizha @SathyaJyothi_ @actornepoleon @dir_Aswin @madheshmanickam @Vidaarth_actor pic.twitter.com/gq8qTgl74A
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 15, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments