ஹிப்ஹாப் தமிழாவுக்கு இன்னும் 17 நாள் தான் அவகாசம் இருக்கு!
Tuesday, June 13, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடித்த 'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் வரிசையில் ஆதியும் ஹீரோவாகி 'மீசையை முறுக்கு' என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஆதி இயக்கி, இசையமைத்து நடித்துள்ள இந்த படத்தில் ஆத்மிகா, விவேக், விஜயலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். சுந்தர் சி இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படம் தற்போது சென்சாருக்கு சென்று 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது. இதனால் இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு சலுகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருகிறது. இந்த வரி அமலுக்கு வந்துவிட்டால் அதன்பின்னர் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை இருக்காது. எனவே இன்னும் இருக்கும் 17 நாட்களுக்குள் ஹிப் ஹாப் தமிழாவின் இந்த படம் வரிவிலக்கு சலுகையை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments