அட்லி மிஸ் செய்த தேதியில் ரிலீஸாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதி திரைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,May 08 2023]

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவான ’ஜவான்’ என்ற திரைப்படம் ஜூன் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் இந்த படத்தின் ரிலீஸ் செய்தி தள்ளி வைக்கப்பட்டதாகவும் இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் ’ஜவான் மிஸ் ஆன தேதியில் ஹிப் ஹாப் தமிழா நடித்த ஆதி அட்லி ’வீரன்’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான ஆதி நடித்த படங்களில் ஒன்று ‘வீரன்’. சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி ஜோடியாக ஆதிரா ராஜ் என்பவர் நாயகி ஆக நடித்துள்ள நிலையில் இந்த படத்தை ஏஆர்கே சரவணன் இயக்கி உள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இந்த படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வீரன்’ திரைப்படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படம் ஜூன் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் எலிமினேட் ஆனவுடன் ஷெரின் எங்கே சென்றார் தெரியுமா? வைரல் வீடியோ..!

 குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேட் ஆன நடிகை ஷெரின் தற்போது கோவா சென்றுள்ள நிலையில் அங்கிருந்து வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

விருது நிகழ்ச்சியில் இவ்ளோ கிளாமரா? நடிகை ஸ்ரேயாவின் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்!

கிளாமர் மற்றும் க்யூட்டான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.

'லியோ' படப்பிடிப்புக்கு வந்த த்ரிஷாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்.. க்யூட் புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட த்ரிஷாவுக்கு படக்குழுவினர் கொடுத்த சர்ப்ரைஸ் குறித்த

திருமணத்திற்காக மதம் மாறினேனா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த குஷ்பு..!

நடிகை குஷ்பு திருமணத்திற்காக மதம் மாறியதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில் அந்த பதிவுக்கு நடிகை குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம்.. இயக்குனர் இந்த பிரபலமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மற்றும் டைட்டில் வின்னர்கள் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருவது புதிது அல்ல. ஏற்கனவே பிக் பாஸ் டைட்டில் வின்னர்களான ஆரி, ஆரவ் ஆகியோர்களும் ஹரிஷ்