'டேய்.. இது 'மரகத நாணயம்' கதைடா.. ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Sunday,May 21 2023]

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ‘வீரன்’ என்ற திரைப்படம் வரம் ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஹிப்ஹாப் ஆதியுடன் வினய் ராய், ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏஆர்கே சரவணன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகிய இந்த படத்தின் டிரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

லேசர் பவர் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மட்டும் தான் நிறுவ வேண்டும் என கூறப்பட்டிருக்கும் நிலையில் அதன் கேபிள்கள் ஒரு கிராமத்தின் வழியாக செல்வதும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் அதை ஹிப் ஹாப் தமிழா ஆதி எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து வருகிறது.

முற்றிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த திரில்லர் திரைப்படம் ’மரகத நாணயம்’ படம் போலவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.