சுந்தர் சியின் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா

  • IndiaGlitz, [Friday,November 17 2017]

சுந்தர் சி தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'மீசையை முறுக்கு' படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடித்து, இசையமைத்து இயக்கியிருந்தார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது மீண்டும் சுந்தர் சி தயாரிக்கும் ஒரு படத்தில் ஆதி நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் ஹிப்ஹாப் தமிழா ஆதி பணிபுரியவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் தொடங்கலாம் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே சுந்தர் சி இயக்கி வரும் 'கலகலப்பு 2' படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் இசையமைத்து வருகிறார். மேலும் நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' மற்றும் ஒரு தெலுங்கு படத்திற்கு ஆதி இசையமைத்து வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது