ஒரே படத்தில் 8 பணிகள்.. எல்லாமே ஹிப் ஹாப் ஆதி தான்.. அதிரடி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஒரே படத்தில் 8 பொறுப்புகளை நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகில் விஷால் நடித்த ’ஆம்பள’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் தமிழா, அதன் பின்னர் ’இன்று நேற்று நாளை’ ’தனி ஒருவன்’ ’அரண்மனை 2 ’உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார்.
மேலும் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானதோடு அந்த படத்தை அவரே இயக்கினார். இதனை அடுத்து ’நட்பே துணை’ ’நான் சிரித்தால்’ உள்பட சில படங்களில் நடித்த அவர், சமீபத்தில் வெளியான ’பிடி சார்’ என்ற படத்தில் நடித்த நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 8வது படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.
’கடைசி உலகப் போர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இசை, இயக்கம் மற்றும் ஹீரோ என ஆகிய 8 முக்கிய பணிகளை ஹிப் ஹாப் தமிழா ஆதி ஏற்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில், நாகூர் கலை இயக்கத்தில், மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் ஹீரோயின் உட்பட மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இன்றி இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ நாளை வெளியாகும் என்று ஹிப்ஹாப் தமிழா ஆதி அறிவித்துள்ளார்.
This is what a bunch of boys tied together, with friendship towards a common goal can do ! Presenting the first look poster of our movie #KadaisiUlagaPor 😁🙏🏻 Bless us with all your love ❤️🤘🏻#hht8 #hhtent ✌🏻GLIMPSE VIDEO “WORLD OF KADAISI ULAGA POR” from TOMORROW 🔥🔥🔥 pic.twitter.com/SZ4ckct38a
— Hiphop Tamizha (@hiphoptamizha) July 18, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments