ஒரே படத்தில் 8 பணிகள்.. எல்லாமே ஹிப் ஹாப் ஆதி தான்.. அதிரடி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,July 18 2024]

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஒரே படத்தில் 8 பொறுப்புகளை நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் விஷால் நடித்த ’ஆம்பள’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் தமிழா, அதன் பின்னர் ’இன்று நேற்று நாளை’ ’தனி ஒருவன்’ ’அரண்மனை 2 ’உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார்.

மேலும் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானதோடு அந்த படத்தை அவரே இயக்கினார். இதனை அடுத்து ’நட்பே துணை’ ’நான் சிரித்தால்’ உள்பட சில படங்களில் நடித்த அவர், சமீபத்தில் வெளியான ’பிடி சார்’ என்ற படத்தில் நடித்த நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 8வது படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

’கடைசி உலகப் போர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இசை, இயக்கம் மற்றும் ஹீரோ என ஆகிய 8 முக்கிய பணிகளை ஹிப் ஹாப் தமிழா ஆதி ஏற்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில், நாகூர் கலை இயக்கத்தில், மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிக்கும் ஹீரோயின் உட்பட மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இன்றி இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ நாளை வெளியாகும் என்று ஹிப்ஹாப் தமிழா ஆதி அறிவித்துள்ளார்.

 

More News

சூப்பர் அப்டேட் கொடுத்த சூர்யாவின் 'கங்குவா' படக்குழு.. ஒரே ஃபயர் தான் போல..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கங்குவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில வாரங்களாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது

2 படங்கள் முடித்தும் வெளியாகாமல் இருக்கும் சோகம்.. ஷங்கர் உதவியாளருக்கே இந்த நிலையா?

ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி தற்போது இந்திய அளவில் பிரபலமாகிவிட்ட நிலையில் அவரிடம் உதவியாளராக இருந்த இன்னொரு இயக்குனர் இரண்டு படங்களை இயக்கி

'ஆடுஜீவிதம்' உட்பட இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் இந்த வாரம் பிரித்விராஜ்  சுகுமாரன், அமலாபால்

பையன்னா இப்படி இருக்கணும்: சின்னி ஜெயந்த் மகனுக்கு கிடைத்த மரியாதை.. வைரல் புகைப்படம்..!

காமெடி நடிகர்  சின்னி ஜெயந்த் மகன் ஐஏஎஸ் முடித்து தற்போது துணை கலெக்டராக பணி செய்து வரும் நிலையில் அவருக்கு மக்கள் மத்தியில் கிடைத்த மரியாதை குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அம்பானி குடும்பத்திற்காக இணைந்த அமிதாப் பச்சன் - அட்லி.. அனைவரையும் அசத்திய 10 நிமிடங்கள்..!

அம்பானி குடும்பத்திற்காக அமிதாப்பச்சன் மற்றும் அட்லி  இணைந்த பத்து நிமிட குறும்படம் ஒன்று ஒளிபரப்பான நிலையில் அந்த குறும்படம் அனைவரையும் அசத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன.