close
Choose your channels

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிட தைரியம் இருக்குன்னா, எதிர்த்து கேட்க தைரியம் வரக்கூடாதா? 'பிடி சார்' டிரைலர்..!

Thursday, May 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘பிடி சார்’ என்ற திரைப்படம் மே 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பள்ளியில் பிடி வாத்தியாராக வேலை பார்க்கும் ஆதியிடம் மாணவர்கள் சகஜமாக பழகும் நிலையில் திடீரென அவருக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர் கைது செய்யப்படும் நிலையில் அந்த பிரச்சினையில் இருந்து அவர் எப்படி மீண்டார்? அந்த பள்ளியில் நடக்கும் பாலிடிக்ஸ் என்ன? படிக்கிற பெண்களை அவதூறாக பேசும் நபர்களுக்கு அவர் என்ன பாடம் கற்றுக் கொடுக்கிறார்? என்பதுதான் இந்த படத்தின் கதை என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

இதுவரை எந்த தமிழ் படத்திலும் பார்த்திராத வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக உள்ளது என்பது டிரைலரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது. பொதுவாக பள்ளிகளில் பிடி வாத்தியார் என்றாலே இளக்காரமாக பார்க்கும் நிலையில் அவர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் என்ன? என்பதை கூறும் வகையில் இந்த கதை அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி, காஷ்மீரா, பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி, தியாகராஜன், முனிஷ்காந்த் உள்பட பல நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்த படம் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு மற்றொரு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment