ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'நான் சிரித்தால்' சென்சார் தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,January 08 2020]

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’ மற்றும் ’நட்பே துணை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்து வெற்றி படமானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த அடுத்த திரைப்படம் ’நான் சிரித்தால்’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தளபதி விஜய் இந்த படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டியதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் ’நான் சிரித்தால்’ படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ’யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிகுமார், பாண்டியராஜன், எருமைச்சாணி விஜய், முனிஷ்காந்த், ரவி மரியா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராணா இயக்கியுள்ளார். சுந்தர் சியின் அவ்னி மூவீஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.