என்னது உலகக்கோப்பையை ஜெயித்து கொடுத்தது ஹிப் ஹாப் தமிழா ஆதியா? அதிர்ச்சி வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,July 08 2024]

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் கோப்பையை வென்றது என்பதும் இதனை அடுத்து இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் டி20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம் ஹிப் ஹாப் தமிழா ஆதி தான் காரணம் என்று அவருக்கு ஒருவர் நன்றி சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அமெரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பையை வென்றது என்பது அனைவரும் தெரிந்தது. இந்த நிலையில் ஹிப்ஹாப் தமிழா ஆதி சமீபத்தில் விமான நிலையத்திற்கு வந்த போது அவருடன் பெரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது ஒருவர் ’உங்களுடன் நான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டபோது ஒருவேளை அவர் தன்னுடைய இசை ரசிகராக இருக்கும் என்று நினைத்து ஹிப்ஹாப் தமிழா ஆதி அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதனை அடுத்து ’நன்றி’ என அந்த நபர் கூற, ’எதற்கு’ என்று ஹிப்ஹாப் தமிழா ஆதி கேட்டார். அப்போது ’நீங்கள் தானே உலகக்கோப்பை வென்று கொடுத்தவர்’ என்று அவர் சொல்ல, அதிர்ச்சி அடைந்த ஹிப்ஹாப் தமிழா ’என்னை நீங்கள் தவறாக வேறு யாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று கூற ’இல்லை எனக்கு நன்றாக தெரியும், நீங்கள் தானே ரோஹித் சர்மா’ என்று கூறினார்.

இதை அடுத்து ’நான் இந்தியாவில் உள்ள இது ஒரு இசையமைப்பாளர்’ என்று கூறியபோது அந்த நபர் சுதாரித்துக் கொண்டு ஓகே என்று கூறிவிட்டு சென்ற காட்சி அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவை ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இந்த நிகழ்வு குறித்து கூறியதை அடுத்து காமெடியான பல கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.