close
Choose your channels

ஆதியின் மீசையை முறுக்க வைத்த 'மீசையை முறுக்கு' வசூல்

Monday, July 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்கள், நடிகர்களாக ஜொலிப்பதில் ஆச்சரியமில்லை. ஏற்கனவே விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் முன்னணி நடிகர்களாக இருக்கும் நிலையில் தற்போது இந்த பட்டியலில் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் இடம் பெற்றுள்ளார்.

ஆதியின் முதல் படமான 'முறுக்கு மீசை' கடந்த 21ஆம் தேதி வெளியாகி எதிர்பார்ப்பை விட அதிக வரவேற்பை பெற்றுள்ளது. முதல் வாரமே இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்த நிலையில் கடந்த வாரம் இந்த படம் சென்னையில் 18 திரையரங்குகளில் 177 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.48,25,215 வசூல் செய்துள்ளது. மேலும் இரண்டாவது வாரத்திலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்தது ஆச்சரியப்படும் வகையில் உள்ளது.

மேலும் இந்த படம் சென்னையில் கடந்த 21 முதல் 30 வரை ரூ.1,48,82,184 வசூல் செய்துள்ளது. பாகுபலி 2 படத்திற்கு பின்னர் இந்த ஆண்டில் மெகா ஹிட் ஆன படமாக 'மீசையை முறுக்கு' காணப்படுகிறது. இந்த படத்தின் சூப்பர் வசூலால் ஹிப் ஹாப் ஆதி தாராளமாக தனது மீசையை முறுக்கி கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment