ஆதியின் மீசையை முறுக்க வைத்த 'மீசையை முறுக்கு' வசூல்

  • IndiaGlitz, [Monday,July 31 2017]

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்கள், நடிகர்களாக ஜொலிப்பதில் ஆச்சரியமில்லை. ஏற்கனவே விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் முன்னணி நடிகர்களாக இருக்கும் நிலையில் தற்போது இந்த பட்டியலில் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் இடம் பெற்றுள்ளார்.

ஆதியின் முதல் படமான 'முறுக்கு மீசை' கடந்த 21ஆம் தேதி வெளியாகி எதிர்பார்ப்பை விட அதிக வரவேற்பை பெற்றுள்ளது. முதல் வாரமே இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்த நிலையில் கடந்த வாரம் இந்த படம் சென்னையில் 18 திரையரங்குகளில் 177 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.48,25,215 வசூல் செய்துள்ளது. மேலும் இரண்டாவது வாரத்திலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்தது ஆச்சரியப்படும் வகையில் உள்ளது.

மேலும் இந்த படம் சென்னையில் கடந்த 21 முதல் 30 வரை ரூ.1,48,82,184 வசூல் செய்துள்ளது. பாகுபலி 2 படத்திற்கு பின்னர் இந்த ஆண்டில் மெகா ஹிட் ஆன படமாக 'மீசையை முறுக்கு' காணப்படுகிறது. இந்த படத்தின் சூப்பர் வசூலால் ஹிப் ஹாப் ஆதி தாராளமாக தனது மீசையை முறுக்கி கொள்ளலாம்.

More News

ஆக்சன் கிங் அர்ஜூனின் 'நிபுணன்' ஓப்பனிங் வசூல் எப்படி?

ஆக்சன்கிங் அர்ஜூன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'நிபுணன்' படத்திற்கு நல்ல வரவேற்பும் விமர்சனமும் கிடைத்துள்ளதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருந்ததாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது...

இரண்டாவது வாரத்திலும் வசூலில் வெற்றி நடை போடும் 'விக்ரம் வேதா'

மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கிய 'விக்ரம் வேதா' திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனைத்து ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட் மற்றும் சமூகவலைத்தளங்களின் ஆதரவு காரணமாக இந்த படம் முதல் வாரத்தில் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றதோடு, இரண்டாவது வாரத்திலும் வசூலில் வெற்றிநடை போட்டு வருகிறது...

ஓவியாவை வெல்வாரா பிந்துமாதவி?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று புதிய பங்கேற்பாளராக நடிகை பிந்துமாதவி களமிறங்கியுள்ளார்...

பிக்பாஸில் பிந்துமாதவி! ஓவியாவுக்கு இனிமேல்தான் போட்டியா?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்து கொண்டு வருபவர்களிடம் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கேட்டால் உடனே யோசிக்காமல் ஓவியாவின் பெயரை கூறி விடுவார்கள்...

இன்னும் பத்தே நாட்களில் முடியும் ஜி.வி.பிரகாஷ் படம்

கோலிவுட்திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக படங்களில் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகிய இருவர் மட்டுமே...