ஹிப் பாப் ஆதியின் யுடியூப் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசையமைப்பாளர் ஹிப் பாப் ஆதியின், யுடியூப் பக்கத்தை முகம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.
நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப் பாப் ஆதி அவர்கள் "ஹிப் ஹாப் தமிழா" என்ற பெயருடைய, யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதில் அவர் இசையமைத்த பாடல்கள் மற்றும் "documentry" படங்களை வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் கூட தீயணைப்பு வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு "தீ வீரன்" என்ற டாக்குமெண்டரியை வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மிகவும் வைரலானது. வெப் சீரிஸ் போல வெளியிட்ட "தமிழி" என்ற டாக்குமெண்டரிக்கும் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அதிகம். 20 லட்சத்திற்கும் அதிகமானோர், இவரின் சேனலை பின்தொடர்ந்து வந்தார்கள்.
இந்தநிலையில் இவரின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து முடக்கியுள்ளனர். அவரின் சேனல் பெயரையும் "Algorand social news" என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர். அதிலுள்ள வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. கஷ்டப்பட்டு திரைத்துறையில் சாதித்த நபர்களின் பட்டியலில் ஆதியின் பெயரும் இடம்பெறும். அந்த அளவிற்கு கடும் உழைப்பு போட்டு, ஆல்பம் பாடல்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரின் யுடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டத்திற்கு, ஆதிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பலரும் மீம்ஸ் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout