அதிமுக அழியும் என சாபமிட்டவரிடம் ஆலோசனை செய்த சசிகலா

  • IndiaGlitz, [Friday,December 16 2016]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது செய்த கெடுபிடிகள், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க சசிகலா செய்த முயற்சிகள் ஆகியவற்றை கடுமையாக விமர்சனம் செய்த இந்து என்.ராம், ஒரு கட்டத்தில் அதிமுக விரைவில் அழியும் என்று சாபமும் இட்டார்.

இவ்வாறு சாபமிட்ட இந்து என்.ராம் அவர்களை நேற்று சசிகலா திடீரென சந்தித்தார். போயஸ் கார்டனில் நடந்த இந்த சந்திப்பில் இந்து என்.ராம் அவர்களிடம் சசிகலா, அதிமுகவின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்ததாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன

தற்போதைய நிலையில் அதிமுகவிற்கு கூட்டு தலைமை தான் சரியானது என ராம் ஆலோசனை கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.