திப்புசுல்தான் விவகாரம். ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய அரசியல் கட்சி தலைவர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'திப்பு சுல்தான்' வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானதும், அதற்கு இந்து முன்னணி அமைப்பாளர் இராம.கோபாலன் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியும் ஏற்கனவே அறிந்ததே. இந்நிலையில் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்த இராமகோபாலனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், 'ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிர்தியாகம் செய்தவர் திப்புசுல்தான். மேலும் அவர் மத நல்லிணக்கத்தை பேணி, இந்து கோவில்களை காத்தவர் என்று வரலாற்று ஆய்வாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திப்புசுல்தானை ஒரு இந்து மத விரோதி என்றும் தமிழர் விரோதி என்றும் இராமகோபாலன் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழக திரைப்படத் துறையினர் ராமகோபாலனின் மிரட்டல் பேச்சுக்கு செவிசாய்க்கக் கூடாது என்று கூறியுள்ள ஜி.ராமகிருஷ்ணன் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் நிற்கும் என்றும் அவர் உறுதிபட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திப்புசுல்தான் படத்தில் நடிப்பது குறித்து ரஜினிகாந்த் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் ஒருபுறம் எதிர்ப்பும், இன்னொரு புறம் ஆதரவுமாக வரும் கருத்துக்கள் திரையுலகை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout