தமிழ் சமூகத்தை சீரழிக்கிறார் ஜூலியானா! சீறும் இந்து மக்கள் கட்சி

  • IndiaGlitz, [Friday,June 30 2017]

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருபக்கம் சீரியல் போல காமெடியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் செய்ய போவதாக இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஜூலியானாவால் தமிழ்ச்சமூகம் சீரழிவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறும்போது, 'முழுக்க முழுக்க லிவிங் டுகெதர் கலாச்சாரம் கொண்ட இந்த நிகழ்ச்சி வெளிநாட்டிற்கு வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கலாம், ஆனால் இந்த நிகழ்ச்சி இனியும் தொடர்ந்தால் தமிழ்ச்சமூகம் சீரழியும்
மெரீனாவில் பிரதமர், முதல்வருக்கு எதிராக அருவருக்கத்தக்க கோஷங்களை போட்ட ஜூலியானாவை தமிழ்ப்பெண் என்று சொல்வதே முட்டாள்தனம். அவருக்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம்? அவருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஒரு வயசுப்பெண் தன்னை கட்டிபிடிக்க யாருமே இல்லையா என்று பேசுவது அருவருக்கத்தக்க விஷயம். தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்க, ஜூலியானா போன்றவர்கள் இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபட்டு, மேற்கத்திய நாகரிகத்தை தமிழ் மக்கள் மீது திணிக்கின்றனர். அதனால்தான், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை எதிர்க்கிறோம்' என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசன் குறித்து கூறியபோது, 'கமல்ஹாசனுக்கு நம் இந்தியப் பாரம்பர்யம், கலாசாரம் மீது நம்பிக்கை கிடையாது. அவர், திரையுலகத்தில் வேண்டுமானால் சாதனை படைத்திருக்கலாம். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் ஆட்சேபனைக்கு உட்பட்டது' என்று கூறினார்.