மக்கள் நீதி மய்யமா? மாமா நீதி மய்யமா?: இந்து முன்னணி கட்சி ஆவேசம்

  • IndiaGlitz, [Friday,July 06 2018]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பொதுமக்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் அந்த தொலைக்காட்சி அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நமது கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் பணம் கொடுத்தால் எந்தவித கலாச்சார சீர்கேட்டு நிகழ்ச்சியையும் நடத்துவார் என்பதற்கு இது உதாரணமாக உள்ளது. ஒரு திருமணமான பெண், ஒரு திருமணமாகாத ஆணுடன் வெளியே சுற்றலாம் என்று இந்த நிகழ்ச்சியில் கூறுவது கலாச்சாரத்தின் சீரழிவாக உள்ளது.

கமல்ஹாசன் நடத்தி வரும் அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யமா? அல்லது மாமா நீதி மய்யமா? என்று கேள்வி கேட்கும் அளவுக்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. 

குழந்தைகள் டிவியை பார்த்தால் ஒரு தெய்வீகமான நிகழ்ச்சியை ஒரு பண்பாட்டான நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி குழந்தைகள் பார்க்க முடியாத வகையில் பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் ஒரு கேவலமான நிகழ்ச்சியாக உள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசனையும் வன்மையாக கண்டிக்கின்றோம்' என்று கூறினார்.

More News

​ கடைக்குட்டி சிங்கத்தில் ஜொலிக்கும் சூப்பர் சிங்கர்  தனுஸ்ரீ மற்றும் தேஜ் !

கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வரும் 13ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் 'கடைக்குட்டி சிங்கம். இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்? மணமகள் யார்?

அஜித் நடித்த 'கிரீடம், விஜய் நடித்த 'தலைவா' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விஜய்.

கதறிகதறி அழும் டேனியல் ரித்விகா, நித்யா: காரணம் என்ன?

தினமும் இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட தினமும் வெளியாகும் 30 வினாடிகளே உள்ள புரமோ வீடியோக்கள் நன்றாக இருப்பதாக் பிக்பாஸ் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: விஜய்க்கு அனுப்பப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு

கடந்த சில வருடங்களாக விஜய் படம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளிவந்ததாக சரித்திரம் இல்லை. ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டிருந்தாலும்

வித்தியாசமான கேரக்டரில் முதன்முதலில் ரிஸ்க் எடுக்கும் வரலட்சுமி

தமிழ் திரையுலகில் பார்வை திறனற்ற கேரக்டரில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் நட்சத்திரங்கள் மிகவும் அரிது. குறிப்பாக நடிகைகள் இந்த கேரக்டரில் நடிக்க தயங்குவதுண்டு.