மக்கள் நீதி மய்யமா? மாமா நீதி மய்யமா?: இந்து முன்னணி கட்சி ஆவேசம்

  • IndiaGlitz, [Friday,July 06 2018]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பொதுமக்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் அந்த தொலைக்காட்சி அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நமது கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் பணம் கொடுத்தால் எந்தவித கலாச்சார சீர்கேட்டு நிகழ்ச்சியையும் நடத்துவார் என்பதற்கு இது உதாரணமாக உள்ளது. ஒரு திருமணமான பெண், ஒரு திருமணமாகாத ஆணுடன் வெளியே சுற்றலாம் என்று இந்த நிகழ்ச்சியில் கூறுவது கலாச்சாரத்தின் சீரழிவாக உள்ளது.

கமல்ஹாசன் நடத்தி வரும் அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யமா? அல்லது மாமா நீதி மய்யமா? என்று கேள்வி கேட்கும் அளவுக்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. 

குழந்தைகள் டிவியை பார்த்தால் ஒரு தெய்வீகமான நிகழ்ச்சியை ஒரு பண்பாட்டான நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி குழந்தைகள் பார்க்க முடியாத வகையில் பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் ஒரு கேவலமான நிகழ்ச்சியாக உள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசனையும் வன்மையாக கண்டிக்கின்றோம்' என்று கூறினார்.