கமல்ஹாசனுடன் இந்து மக்கள் கட்சி தலைவர் திடீர் சந்திப்பு

  • IndiaGlitz, [Friday,February 16 2018]

நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் அவரை சில அரசியல் தலைவர்களும், அவர் சில அரசியல் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று மாலை முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனை கமல் சந்தித்த நிலையில் சற்றுமுன்னர், கமல்ஹாசனை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் கொள்கையில் காவி நிறம் இல்லை என நம்புகிறேன்; அப்படி இருக்குமானால், அவருடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று கமல் கூறியிருந்த நிலையில் காவி நிறத்தை சேர்ந்த ஒரு தலைவர் கமல்ஹாசனை சந்தித்தது அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது. கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என இருதரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

கார்த்திக் சிதம்பரம் ஆடிட்டர் திடீர் கைது! அமலாக்கத்துறை அதிரடி

என்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக கார்த்திக் சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இன்று கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென கைது செய்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஜீவா

கடந்த 2016ஆம் ஆண்டு பிரபல பத்திரிகையாளர் ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருதையும் பெற்றது.

கமல் கட்சியில் சேருகிறாரா டி.என்.சேஷன்?

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நிலையில் அவருடைய கட்சியில் பல விஐபிக்கள் அன்றைய தினம் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

லெஸ்பியன் ஆகும் ஓவியா: ஆதரவு கொடுக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா 3', மற்றும் 'களவாணி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

காவிரி தீர்ப்பு: கமல்ஹாசனின் ரியாக்சனும், ரஜினியின் மெளனமும்

பல வருடங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே இருந்து வந்த காவிரி பிரச்சனைக்கு ஒருவழியாக இன்று இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது.