சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் பரிசு: அறிவிப்பு வெளியிட்ட அரசியல் பிரமுகருக்கு குவியும் கண்டனங்கள்

  • IndiaGlitz, [Friday,September 18 2020]

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்ட அரசியல் கட்சி தலைவர் ஒருவருக்கு நெட்டிசன்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு நீதிமன்றத்தையும் இந்த அறிக்கையை அவமதித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சூர்யா மீது எந்த அவமதிப்பு வழக்கும் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தர்மா என்பவர், ‘நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்குவார் என்று அறிவித்து உள்ளார்.

மேலும் அகரம் பவுண்டேஷன் என்ற பெயரில் சூர்யா, இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு உள்ளார் என்றும் நீதிமன்றத்தையும் அவர் அவமதிப்பாக பேசியுள்ளார் என்றும் கூறியுள்ளார். இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

எனக்கு கொரோனா… செத்துடுவேன்… மனைவியிடம் டயலாக் அடித்து விட்டு சின்னவீடு தேடிய கில்லாடி கணவன்!!!

எனக்கு கொரோனா வந்துவிட்டது, நான் கண்டிப்பாக உயிர்பிழைக்க மாட்டேன்,

மூக்கு கண்ணாடி கொரோனாவில் இருந்து பாதுகாப்பு தருமா? விஞ்ஞானிகளின் புது விளக்கம்!!!

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அவுட்டாக்க வாய்ப்பு இருந்தும் அப்படி செய்யாத பவுலர்… ரசிகர்களை கவர்ந்த வீடியோ காட்சி!!!

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது மான்கட் முறையில் பேட்ஸ்மேனை அவுட்டாக்க வாய்ப்பு கிடைத்தும்

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையா? தலைமை நீதிபதி தகவல்

நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார் என்பது தெரிந்ததே. இந்த அறிக்கை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய

விமர்சனங்களுக்கு தக்கப் பதிலடி… சமூகவலைத் தளத்தில் பாராட்டுகளைக் குவித்து வரும் தமிழக முதல்வர்!!!

கொரோனா வைரஸ் பரவல், நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் தமிழக அரசு பெரும் தவறிழைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள்