ஷேர்ஷா படத்தின் வெற்றி....!இயக்குனர் விஷ்னுவர்தனின் பெயரை தவிர்க்கும் இந்தி ஊடகங்கள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷேர்ஷா என்ற இந்தி திரைப்படத்தின் விமர்சனங்கள் பாசிட்டிவாக வந்த நிலையிலும், இயக்குனர் விஷ்ணு வர்தனின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்படுவதாக செய்திகள் கூறுகிறது.
தமிழில் பட்டியல், பிர்லா போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவர் இந்தி மொழியில் இயக்கியுள்ள திரைப்படம் தான் "சேர்ஷா". இக்கதை கார்கில் போரில் வீர மரணம் அடைந்த 'கேப்டன் விக்ரம் பத்ரா' அவர்களின் வீர சாகசங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படமாகும். இதில் சித்தார்த் மல்கோத்ரா நாயகனாகவும், கியாரா அத்வானி நாயகியாகவும் நடிக்க, கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. அமேசான் பிரைமில் வெளியான இத்திரைப்படம் பல தரப்பு மக்களிடம் இருந்து பாராட்டைப்பெற்ற நிலையில், இப்படம் குறித்த செய்திகளில் விஷ்ணு வர்த்தனின் பெயர் திட்டமிட்டே மறைக்கப்படுவதாக தகவல்கள் உலா வருகின்றன.
நடிகர் சித்தார்த் மற்றும் கரண் ஜோஹரின் பெயர்களே முன்னிறுத்தப்பட்டும், தரண் ஆதர்ஷ் போன்ற விமர்சகர்கள் விஷ்ணு வர்தனின் பெயரை தங்களுடைய பதிவுகளில் கவனமாக சேர்க்காமல் உள்ளனர். பொதுவாகவே தென்னிந்திய நட்சத்திரங்களை, இந்தி சினிமாவில் திட்டம் போட்டு புறக்கணிக்கும் செயல் தொடர்ந்து வருகிறது. இந்த செயல் விஷ்ணு வர்தனின் ஹிட் படத்திலும் தொடர்ந்து வருவதால், ரசிகர்கள் கடும் கோபமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com