ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், ஹிந்தியை கற்று கொள்ளுங்கள்: சுஹாசினி மணிரத்னம்

ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும், ஹிந்தி நல்ல மொழி என்றும் அனைவரும் ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சுஹாசினி மணிரத்தினம் நகை கடை நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

இன்று அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடை ஒன்றின் சிறப்பு நிகழ்ச்சியில் சுஹாசினி பங்கேற்றார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’இந்தி மொழி குறித்து கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த சுஹாசினி, ‘எங்களைப் போன்ற நடிகர்கள் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும் என்றும், அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

எல்லோரும் அனைத்து மொழிகளையும் சமமாக கருதவேண்டும் என்றும் குறிப்பாக ஹிந்தி நல்ல மொழி அதை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் நாம் பேச வேண்டுமென்றால் ஹிந்தி மொழியை கற்று கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தற்போது தமிழ், மலையாள திரைப்படங்கள் சிறந்த தரத்தில் இருப்பதாகவும் தெலுங்கு திரைப்படங்கள் பிரமாண்டமாகவும் கன்னட திரைப்படங்கள் நாம் யோசிக்க முடியாத அளவுக்கு முன்னேறி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார் .

தென்னிந்திய படங்களுக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார்.