இந்திய அளவில் சாதனை செய்ய காத்திருக்கும் 'மாஸ்டர்': மாஸ் தகவல்!

  • IndiaGlitz, [Thursday,December 03 2020]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று சமீபத்தில் படக்குழுவினர் உறுதி செய்த நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான சரியான தேதியை படக்குழுவினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது வந்த புதிய தகவலின்படி இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வருவதாகவும் ஒரே நேரத்தில் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்த படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அகில இந்திய அளவில் இந்த திரைப்படத்தை வெளியிடும் வகையில் இந்தி மொழியிலும் டப் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை வாங்குவதற்கு பிரபல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே தளபதி விஜய்யின் முதல் பான் இந்தியா படமாக ’மாஸ்டர்’ படம் இருக்கும் என்றும் இந்தியா முழுவதும் அந்தந்த மாநில மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பதால் மிகப்பெரிய வசூல் சாதனை செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ட்ரைலர் தயாராகி வருவதாகவும் அனேகமாக ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டில் ட்ரைலர் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.