வலுக்கும் எதிர்ப்புகள்: பிக்பாஸ் ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறதா?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதி நாள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீசனின் வெற்றியாளர் யார்? என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்தியில் கடந்த மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ சீசன் 13 நிகழ்ச்சி எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவில் பயங்கர எதிர்ப்பை சந்தித்து வருவதுதான் காரணம்.

பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் ஆபாசமாக நடந்து கொள்வதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெண் போட்டியாளர்கள் தங்களுக்கு தெரியாத ஆண்களுடன் தங்களின் படுக்கையை ஷேர் செய்ய வேண்டும் போன்ற கருத்துக்களை கூறி வருவதும் பெரும் கண்டனங்களை பெற்று வருகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட மதக்கலாச்சாரத்தை தாக்கும் வகையில் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான்கானும் இதனை கண்டுகொள்வதில்லை என்றும் நெட்டிசன்கள் புகார் கூறி வருகின்றனர்.

எனவே இதுவரை இல்லாத வகையில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளதால் இந்த நிகழ்ச்சி எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

More News

பிக்பாஸ் டைட்டிலை முகின் வெல்ல ஒரே காரணம்!

பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகின் என கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. சமூகவலைத்தளங்களிலும்,

மாதவன் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம் வேதா' வெற்றி படத்திற்கு பின் மாதவன் தற்போது அனுஷ்காவுடன் நிசப்தம்' மற்றும் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'ராக்கெட்டரி'

மணிரத்னத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆதரவு!

மணிரத்னம் உள்பட 49 திரையுலக பிரபலங்கள் நாட்டின் நிலை குறித்து விரிவாக ஒரு கடிதம் எழுதி அதில் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பிய நிலையில் இந்த கடிதம் காரணமாக 49

நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்து: சென்னையில் பரபரப்பு

bigg boss tamil yaashika anand car accident youth injured nungambakkam

பாஜகவில் திடீரென இணைந்த பிரபல நடிகர்-தயாரிப்பாளர்

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் அரசியலில் களம் புகுந்து பல்வேறு கட்சிகளில் இணைந்து வருவதும், ஒருசிலர் சொந்தமாகவே கட்சி ஆரம்பித்து வருவதும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் ஆகும்