பிரபல ஹிந்தி நடிகர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி....!

  • IndiaGlitz, [Thursday,July 01 2021]

ஹிந்தி நடிகர் திலீப் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹிந்தி சினிமாவில் மூத்த நடிகரான திலீப் குமார், கடந்த 1944-ஆம் ஆண்டில் ஸ்வார் என்ற படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அக்காலத்தில் பிரபல நடிகராகவும், முன்னணி நடிகராகவும் இருந்தவர், தமிழ் மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தாதாசாகேப் பால்கே விருது, மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன், சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். 1998-ல் தான் தனது கடைசி படத்தில் நடித்திருந்தார். உடல்நல குறைபாட்டால் நடிப்பதை நிறுத்தியவர் ஓய்வு பெற்று வந்துள்ளார்.

98 வயதுடைய திலீப் குமாருக்கு திடீரென மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட, அவர் தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் உடல்நிலை சரியாக இருப்பதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளது.
 

More News

தொடங்கியது 'பீஸ்ட்' படப்பிடிப்பு: இன்றைய படப்பிடிப்பில் என்ன காட்சி?

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கிவரும் 'பீஸ்ட்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் தொடங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதிக உணவு உண்பதை கன்ரோல் செய்யலாம் .....! உடல் எடையை குறைக்க வந்தாச்சு புதிய டிவைஸ்...!

நம்மில் சிலர் அதிகம் உணவு உண்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள், இதனால் உடல் எடை கூடும் அபாயமும் உள்ளது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய டிவைஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் நியூஸிலாந்தினர்.

ப்ரியா பிரகாஷ் வாரியரா இது? உச்சகட்ட கிளாமரால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஒரே ஒரு கண்ணசைவில் உலக புகழ் பெற்றவர் நடிகை ப்ரியா பிரகாஷ்வாரியர் என்பதும் 'ஒரு ஆதார் லவ்' படத்தின் டிரைலரில் சக மாணவரை அவர் புருவ நடனத்துடன் கூடிய கண்ணடிக்கும் காட்சி

நடிகை சரண்யா மோகனின் க்யூட் குழந்தைகள்: வைரல் புகைப்படங்கள்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் தனுஷின் 'யாரடி நீ மோகினி' 'ஜெயங்கொண்டான்' உள்பட சில படங்களில் நடித்த நடிகை சரண்யா மோகன், 'வெண்ணிலா கபடி குழு' படத்தின்

கடவுளுக்கு இணையான சேவைக்கு ஒரு சல்யூட்… மருத்துவர்கள் தினம் உருவான வரலாறு!

கடவுளுக்கு ஈடாக ஒரு மனிதனுக்கு நாம் மதிப்பு கொடுக்கிறோம் என்றால் அது மருத்துவராகத்தான் இருக்க வேண்டும்.