வேட்டைக்குத் தயாரான ஹிண்டன் பர்க்… அதானிக்கு பிறகு எந்த நிறுவனம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பர்க் தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
நிதி நிறுவனங்கள் தங்களது பங்குகளில் முறைகேடு செய்தல், பங்கினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்களை துவங்கி வரி ஏய்ப்பு செய்தல் போன்றவற்றை ஹிண்டன் பர்க் நிறுவனம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி அதானி குழுமம் பற்றிய தகவல்களை அந்நிறுவனம் கசியவிட்டது. இதனால் 100 பில்லியன் டாலருடன் ஆசியாவிலேயே பெரிய பணக்காரராக இருந்துவந்த அதானி தற்போது 50 பில்லியன் டாலரோடு கடும் சரிவைச் சந்தித்து வருகிறார்.
ஹிண்டன் பர்க் வெளியிடும் அறிக்கையினால் பொதுவாக ஒரு நிறுவனத்தின் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வருவதோடு அதன் நிதிநிலை மற்றும் பங்குகளையே புரட்டிப்போடும் அளவிற்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படுகிறது. இதனால் உலக அளவில் இந்நிறுவனத்தின் அறிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் இந்நிறுவனம் தெரிவு செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் பங்குசந்தையில் அபரிதமான வளர்ச்சிப் பெற்ற நிறுவனங்களாகவே இருக்கின்றன. அந்த வகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக அதானி குழுமத்தின் பல்வேறு வளர்ச்சிகளை ஆய்வுசெய்து அறிக்கையை வெளியிட்டதாகவும் ஹிண்டன் பர்க் நிறுவனம் தெரிவித்து இருந்தது.
அதானி குழுமத்திற்கு முன்னதாக கடந்த வருடத்தில் மட்டும் எலக்ட்ரிக் வாகன துறையில் நிகோலா கார்ப், மருத்துவத் துறையில் நடேரா, ஏனோசியன் பயோசயின்சஸ், எஸ்டாபிளிஸ்மெண்ட் ஆய்வகங்கள், வெல்டவர் போன்ற நிறுவனங்களின் முறைகேடுகளை ஹிண்டன் பர்க் வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இந்தச் சரிவை ஷாட் செல்லிங் முறையில் பணமாக்கும் முயற்சியிலும் ஹிண்டன் பர்க் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹிண்டன் பர்க் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் New Report Soon another big one என்று பதிவிடப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அதானிக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வரப்பொவது எந்த நிறுவனம்? ஒருவேளை மீண்டும் இந்திய நிறுவனமாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு வருகிறது.
New report soon—another big one.
— Hindenburg Research (@HindenburgRes) March 22, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout