பிரபல நடிகையை 2வது திருமணம் செய்த கமல் பட இசையமைப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'தசாவதாரம்' படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா, தொலைக்காட்சி நடிகை சோனியா கபூரை நேற்றிரவு திடீரென திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் இருவீட்டார்களின் நெருக்கமானவர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
ஹிமேஷ் ரேஷ்மியா ஏற்கனவே கடந்த 1994ஆம் ஆண்டு கோமல் என்பவரை திருமணாம் செய்தார். இவர்களுக்கு சுவயம் என்ற மகன் இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு இவர் நடிகை சோனியா கபூரை திடீர் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் பாலிவுட் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு கூட தெரியாத வகையில ரகசியமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹிமேஷ் ரேஷ்மியா இசையமைப்பாளர் மட்டுமின்றி நடிகர், பாடகர், கதையாசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகங்களை கொண்டவர் என்பதும், இவர் நடித்த ஆப் கா சுரூர் என்ற படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments