பிரபல நடிகையை 2வது திருமணம் செய்த கமல் பட இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Saturday,May 12 2018]

கமல்ஹாசன் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'தசாவதாரம்' படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா, தொலைக்காட்சி நடிகை சோனியா கபூரை நேற்றிரவு திடீரென திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் இருவீட்டார்களின் நெருக்கமானவர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

ஹிமேஷ் ரேஷ்மியா ஏற்கனவே கடந்த 1994ஆம் ஆண்டு கோமல் என்பவரை திருமணாம் செய்தார். இவர்களுக்கு சுவயம் என்ற மகன் இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு இவர் நடிகை சோனியா கபூரை திடீர் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் பாலிவுட் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு கூட தெரியாத வகையில ரகசியமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹிமேஷ் ரேஷ்மியா இசையமைப்பாளர் மட்டுமின்றி நடிகர், பாடகர், கதையாசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகங்களை கொண்டவர் என்பதும், இவர் நடித்த ஆப் கா சுரூர் என்ற படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கமல்ஹாசனின் 'பிக்பாஸ் 2' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

திருமணத்திற்கு பின் சமந்தாவின் ஹாட்ரிக் வெற்றி

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் வாய்ப்பு குறைந்துவிடும். அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் அந்த படங்கள் ஹிட்டாகுவது அரிதாகவே இருந்து வந்துள்ளது.

ரஜினியுடன் கூட்டணி வைத்தால் நாசமாகிவிடும்: சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மேலிடம் இன்று வரை ரஜினியுடன் கூட்டணி வைப்பதையே விரும்புவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பம்

கமலுக்கு சாவித்திரியின் பாராட்டும், சாவித்திரிக்கு கமலின் பாராட்டும்

உலகநாயகன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக சாவித்திரி நடித்த 'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தில் அறிமுகமானார் என்பதும், முதல் படத்திலேயே சிறப்பாக நடித்ததற்காக

நயன்தாராவுக்காக பாடலாசிரியராக மாறிய பிரபல நடிகர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'கோலமாவு கோகிலா' என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே