எழில் கொஞ்சும் இமயமலை… நடிகை ஜோதிகா வெளியிட்ட டிரெக்கிங் வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ஜோதிகா முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் கணக்குத் துவங்கி ஒரே நாளில் 1 மில்லியன் ஃபாலோயர்கள் குவிந்தது நமக்குத் தெரிந்ததுதான். அதோடு தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் லாக்டவுன் நினைவுகளை பாசிட்டிவ் மனநிலையோடு பதிவுசெய்ய இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.
அந்த வகையில் அவர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இமயமலையில் இருந்தபோது தேசியக்கொடி ஏந்தியபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் படு வைரலானது. தற்போது இமயமலையில் தான் பார்த்த இடங்கள், டிரெக்கிங் பயணத்தின்போது நடந்த நிகழ்வுகள், அழகான மலை, நீர்த்தேக்கம் என ஒட்டுமொத்த அழகையும் குவித்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் அழகான மலைகளுக்கு நடுவே ஓடும் ஆறு, குட்டி குட்டி நீரோடைகள், ஒரே இடத்தில் அமைதியாக காத்திருக்கும் நீர்க்குவியல், மலைகளில் உறைந்திருக்கும் பனி, ஆங்காங்கே பசியாற்றிக் கொள்ளும் ஆடுகள், பச்சைப் போர்த்திய மலைகள் என்று ஒட்டுமொத்த இமயமலையின் அழகையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். நடிகை ஜோதிகா வெளியிட்ட இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் சசிக்குமாருடன் இணைந்து நடிகை ஜோதிகா “உடன்பிறப்பே” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சசிக்குமாருக்கு சகோதரியாக நடிக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com