18 வயதில் பைலட்-ஆன சிறுமி… யார் இந்த சாக்ஷி கோச்சார்?

  • IndiaGlitz, [Friday,June 30 2023]

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர் வணிக ரீதியாக பயணிக்கும் விமானத்திற்கு ஓட்டுநர் உரிமத்தைப் பெற்று இந்தியாவின் இளமையான பைலட் எனும் பெயருக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து இவர் செய்துள்ள இந்தச் சாதனை தற்போது பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் பர்வானூ எனும் பகுதியில் பிறந்தவர் சாக்ஷி கோச்சார். ஒரு சிறிய வணிகக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு 10 வயதான போதே ஒரு சிறந்த விமானி ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு இருக்கிறது. விமானி ஆக வேண்டும் என்பது கனவாக இருந்தாலும் சிறிய வயதிலேயே இவர் சிறந்த நடனக் கலைஞராகவும் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் மாநிலத்திலேயே நடனத்தில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளைத் தக்கவைத்துக் கொண்ட இவர் 10 ஆம் வகுப்பு முடித்த உடனேயே தனது பைலட் கனவை நிறைவேற்றுவதற்கான காரியத்தில் இறங்கியுள்ளார். இதற்காக சண்டிகரில் உள்ள அரசு மாதிரி மூத்த மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த இவர் தனது 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றம் கணித பாடங்களுடன் அறிவியலைத் தேர்வு படித்திருக்கிறார்.

இந்நிலையில் தனது பெற்றோரின் உதவியோடு சண்டிகரில் உள்ள ஸ்கைலைன் ஏவியேஷன் கிளப்பில் இணைந்து பைலட்டாக பயிற்சி பெற துவங்கியிருக்கிறார். கேப்டன் ஏடி மானெக் என்பவரிடம் 4 மாதங்கள் கடினமான வணிக பைலட் பயிற்சியைப் பெற்ற இவர் அமெரிக்காவில் உள்ள விமான கிளப் பயிற்சிக்காக (சிபிஎல்) அமெரிக்கா சென்று தற்போது ஒரு முழுமையான வணிக விமானி ஆகியிருக்கிறார்.

மேலும் இதற்கான ஓட்டுநர் உரிமம் கடந்த மே 30 அன்று சாக்ஷி கோச்சாருக்கு 18 வயது பூர்த்தியான நிலையில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்தியாவின் இளைய விமானி என்ற பட்டமும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

ஒரு விமானி ஆக வேண்டும் என்று தான் சிறிய வயதில் கண்ட கனவு தற்போது நிஜமாகியிருப்பதாக கூறியிருக்கும் சாக்ஷி கோச்சார் இதற்காக ரூ.70 லட்சம் செலவு ஆகியிருக்கிறது. இந்தியாவில் ஒருவர் விமான பைலட் ஆக வேண்டும் என்பதெல்லாம் பெரிய விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில் என்னுடைய பெற்றோர், சகோதரர், தாத்தா பாட்டி என்று அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்து இதை உண்மையாக்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் எனக்கு வேலை கிடைத்ததும் எனது பெற்றோருக்கு அந்தப் பணத்தை திருப்பித் தருவேன் என்றும் சாக்ஷி கோச்சார் கூறியிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

More News

Toilet-இல் ஸ்மார்ட் போன்கள்? கழிவறை இருக்கையைவிட மோசம்… அச்சுறுத்தும் புது ஆய்வு!

கழிவறைக்கு செல்லும்போது செல்போன்களை எடுத்துச்செல்லும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலானோரிடம் அதிகரித்து இருக்கும் நிலையில் அவை கழிப்பறை இருக்கைகளைவிட பத்து மடங்கு அதிகமான கிருமிகளை,,,

18 வயதிலேயே கவர்ச்சி ரூட்டா? குட்டி நயனின் புது போட்டோ ஷுட்டிற்கு ரசிகர்கள் கேள்வி?

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே குழந்தை நட்சத்திரமாக வரவேற்பை பெற்றவர் அனிகா சுரேந்திரன்

மாலத்தீவே தோற்கும்… இந்தியாவில் இருக்கும் 5 அழகான தீவுகள்… பட்ஜெட் சுற்றுலா!

பொதுவாக சினிமா பிரபலங்கள் பலரும் பெரிய பெரிய கடற்கரை பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள ரிசார்டில் வசதியாகத் தங்கிவிட்டு அவ்வபோது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியாவை நினைத்தாலே பயமா இருக்கு? கபில்தேவ் கருத்துக்கு என்ன காரணம்?

உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் இந்தியக் கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

'சந்திரமுகி 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சரியான தேதியை லாக் செய்த படக்குழுவினர்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2'  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி