ஹிஜாப் போராட்ட மாணவி: வெகுமதியாக கிடைத்த ரூ.5 லட்சத்தை என்ன செய்தார் தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,February 16 2022]
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு சென்றபோது அவரை சுற்றி ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் இட்ட மாணவர்கள் மத்தியில் அல்லாஹு அக்பர் என கோஷமிட்ட மாணவிக்கு கிடைத்த 5 லட்சத்தை அவர் என்ன செய்தார் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹிஜாப் அணிந்து மாணவி முஸ்கான் என்பவர் கல்லூரிக்கு சென்றபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெய் ஸ்ரீராம் என 50க்கும் மேற்பட்டவர்கள் கோஷமிட்டனர். ஆனால் அந்த கோஷத்தை கண்டு பயப்படாமல் அவர் அல்லாஹு அக்பர் என்று எதிர்கோஷமிட்டார். அவரது வீரத்தைப் பாராட்டி அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்தது மட்டுமின்றி லட்சக்கணக்கில் பணமாகவும் வெகுமதி குவிந்தது.
அவ்வாறு தனக்கு கிடைத்த 5 லட்ச ரூபாய் வெகுமதியை அந்த மாவட்டத்தின் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாங்க செலவு செய்யப் போவதாக மாணவி முஸ்கானின் தந்தை தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் வாங்க அதற்கு மேலும் பணம் தேவை என்றால் தங்கள் சொந்தப் பணத்தையும் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.