குரங்கு-பி வைரஸ் வரிசையில் பயமுறுத்தும் இன்னொரு வைரஸ்? அறிகுறிகள் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்தில் உணவுக்குடலை தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்தும் "நோரோ வைரஸ்" தற்போது அதிக அளவில் பரவி வருவதாக அந்நாட்டின் பொதுச் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. அதிகத் தொற்றுத் தன்மை வாய்ந்த இந்த நோரோ வைரஸை "ஃபுட் பாய்சனிங்" என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கொரோனாவிற்கு நடுவில் "குரங்கு-பி" எனும் புதிய வைரஸ் பாதிப்பு சீனாவில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸின் பாதிப்பினால் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 70-80% அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸானது, பாதிக்கப்பட்ட நபரின் மத்திய நரம்பு மண்டலப் பகுதிகளில் கடும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தி விரைவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் "நோரோ வைரஸ்" தொற்று அதிகளவில் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. அமெரிக்காவில் உணவு தொடர்பாக ஏற்படும் நோய் பாதிப்பில் இந்த நோரோ வைரஸ் முக்கியக் காரணியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நோய் தற்போது இங்கிலாந்தில் அதிக வேகமாகப் பரவி வருகிறது.
அறிகுறிகள்-
உணவுக்குடலை தாக்கும் இந்த வைரஸ் 12-48 மணி நேரத்தில் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல்வலி, தலைவலி ஆகியவற்றை எற்படுத்துகின்றன. 3 நாட்கள் வரை தொடரும் இந்த வைரஸ் சிலருக்கு அறிகுறியே இல்லாமல் கூட பாதிப்பை ஏற்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட நபரின் மலம் மற்றும் வாந்தியில் தொற்றிக் கொண்டு இந்த "நோரோ வைரஸ்" மற்ற நபருக்கு மிக எளிதாகப் பரவி அவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் சுத்தமில்லாத உணவு, தண்ணீர், சுத்தமில்லாத சுற்றுப்புறம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் சாப்பிடுவதற்கு முன்பு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் இதுபோன்ற பாதிப்பு கொண்ட மனிதர்களிடம் இருந்து சற்று பாதுகாப்பான முறையை அணுக வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நோரா வைரஸ் பாதிப்புக்கு பெரிய அளவில் சிகிச்சை தேவைப்படாது எனக் கூறும் மருத்துவர்கள் வயதானவர்கள், குழந்தைகளுக்கு இந்த அறிகுறி இருக்கும்போது மருத்துவரை அணுக வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout