சூரறைபோற்று பாணியில் ஒரு தனியார் விண்கலம்… தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில்!

  • IndiaGlitz, [Monday,November 16 2020]

 

விலை மலிவான விமான போக்குவரத்து எனும் கேப்டன் கோபிநாத்தின் கனவுத் திட்டத்தைத்தான் சூரரைப் போற்று திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். அதேபோல விண்வெளி ஆராய்ச்சியிலும் தனது கனவுத் திட்டத்தை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம். இந்நிறுவனம் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தோடு இணைந்து ஒரு விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்குக் காரணம் அதற்கான பொருட்செலவு மிகவும் அதிகம் என்பதுதான். இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான விண்கல உற்பத்தியில் புதிய புரட்சியை நிகழ்த்தி இருக்கிறது அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனம். நாசாவின் விண்கல உற்பத்தி மற்றும் ரஷ்யாவின் விண்கல உற்பத்தியை விட ஸ்பேஸ் எக்ஸ் மிகவும் குறைந்த விலையில் விண்கலத்தை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டு இருக்கிறது.

கடந்த மே மாதம் 30 ஆம் தேதி புளோரிடாவின் கென்னட் விண்வெளி மையத்தில் இருந்த பால்கன் 9 எனும் ராக்கெட் மூலம் டிராகன் 4 எனும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் விண்கலம் விண்ணை நோக்கி பாய்ந்தது. அதில் நாசாவை சார்ந்த 3 விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 7 விஞ்ஞானிகள் பயணம் செய்தனர். அவர்கள் தற்போது சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்து விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் விண்கலத்தை சுமந்து சென்ற அதன் ராக்கெட்டு கூட மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும் என்ற தகவலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்கலத்தை பிரித்து விட்டுவிட்டு கடல் பகுதியில் விழுந்து விடும். இப்படி விழும் ராக்கெட் வெறும் கழிவுகளாக மட்டுமே திரும்ப கிடைக்கும். ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் பால்கன் 9 மிகவும் பத்திரமாக கடல் பகுதியில் தரையிறங்கி அது மீண்டும் மறுபயன்பாட்டிற்கு காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு தனியார் நிறுவனம் அதுவும் மலிவு விலையில் தனது கனவுத் திட்டத்தை நிஜமாக்கி இருக்கிறது.

More News

தேன்மொழி சீரியல் நடிகர் கொலை: நண்பரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமா?

'கலக்கப்போவது யாரு' புகழ் ஜாக்குலின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் தேன்மொழி என்ற சீரியலில் நடித்த நடிகர் ஒருவர் நேற்று சென்னையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்

கண்ணை மறைக்கும் பாலாஜியின் காதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடக்கும் என்பது அறிந்ததே

என் வார்த்தையை நம்புங்கள், எந்த சேதமும் ஏற்படாது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவ மழை பெய்யும் போது கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த சென்னை வெள்ளம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழை காரணமாக

வருங்கால கணவருடன் தீபாவளி கொண்டாடிய விஜய்சேதுபதி பட நடிகை!

நடிகர் விஜய்சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிஹாரிகா. இவர் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்தவர் மட்டுமின்றி

தீபாவளி கொண்டாடும் ரம்பாவின் க்யூட் குழந்தைகள்: வைரலாகும் வீடியோ!

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா என்பதும் அதன் பின்னர் அவர் கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு