சூரறைபோற்று பாணியில் ஒரு தனியார் விண்கலம்… தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விலை மலிவான விமான போக்குவரத்து எனும் கேப்டன் கோபிநாத்தின் கனவுத் திட்டத்தைத்தான் சூரரைப் போற்று திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். அதேபோல விண்வெளி ஆராய்ச்சியிலும் தனது கனவுத் திட்டத்தை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம். இந்நிறுவனம் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தோடு இணைந்து ஒரு விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்குக் காரணம் அதற்கான பொருட்செலவு மிகவும் அதிகம் என்பதுதான். இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான விண்கல உற்பத்தியில் புதிய புரட்சியை நிகழ்த்தி இருக்கிறது அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனம். நாசாவின் விண்கல உற்பத்தி மற்றும் ரஷ்யாவின் விண்கல உற்பத்தியை விட ஸ்பேஸ் எக்ஸ் மிகவும் குறைந்த விலையில் விண்கலத்தை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டு இருக்கிறது.
கடந்த மே மாதம் 30 ஆம் தேதி புளோரிடாவின் கென்னட் விண்வெளி மையத்தில் இருந்த பால்கன் 9 எனும் ராக்கெட் மூலம் டிராகன் 4 எனும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் விண்கலம் விண்ணை நோக்கி பாய்ந்தது. அதில் நாசாவை சார்ந்த 3 விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 7 விஞ்ஞானிகள் பயணம் செய்தனர். அவர்கள் தற்போது சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்து விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விண்கலத்தை சுமந்து சென்ற அதன் ராக்கெட்டு கூட மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும் என்ற தகவலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்கலத்தை பிரித்து விட்டுவிட்டு கடல் பகுதியில் விழுந்து விடும். இப்படி விழும் ராக்கெட் வெறும் கழிவுகளாக மட்டுமே திரும்ப கிடைக்கும். ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் பால்கன் 9 மிகவும் பத்திரமாக கடல் பகுதியில் தரையிறங்கி அது மீண்டும் மறுபயன்பாட்டிற்கு காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு தனியார் நிறுவனம் அதுவும் மலிவு விலையில் தனது கனவுத் திட்டத்தை நிஜமாக்கி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com