'புலி' படத்தின் அமெரிக்க விநியோக உரிமை ரூ.2 கோடியா?

  • IndiaGlitz, [Tuesday,August 18 2015]

இளையதளபதி விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்பட பலர் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அமெரிக்க நாட்டின் விநியோக உரிமை இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு 'புலி' படத்தின் அமெரிக்க உரிமை விற்பனையாகியுள்ளதாகவும், இதுவரை வெளியான விஜய் படங்களில் இந்த தொகைதான் மிக அதிகமானது என்றும் தகவல்கள் கூறுகின்றன. கண்டிப்பாக இந்த படம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக விநியோகிஸ்தர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 6.5 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் முந்தைய சூப்பர் ஹிட் படங்களான துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை விட இந்த படத்தின் வசூல் சாதனை படைக்கும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பாகுபலி' படத்தின் சாதனையை 'புலி' முறியடிக்க வேண்டும் என்றே விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. புலி படத்தின் மற்ற பகுதிகளின் விநியோக உரிமைகளும் மிகப்பெரிய தொகைகளுக்கு விற்பனை செய்து வருவதை பார்க்கும்போது கண்டிப்பாக விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யும் என்றே கூறப்படுகிறது.