நம்பிக்கை வாக்கெடுப்பு. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
- IndiaGlitz, [Monday,February 20 2017]
கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது. இந்த வாக்கெடுப்பின்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதோடு, குண்டுக்கட்டாக தூக்கி சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்ற கோரி இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளதோடு இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று நாளை விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.
நாளை நடைபெறும் விசாரணையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சென்னை ஐகோர்ட்டின் முடிவை தெரிந்து கொள்ள தமிழக மக்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.