நம்பிக்கை வாக்கெடுப்பு. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Monday,February 20 2017]

கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது. இந்த வாக்கெடுப்பின்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதோடு, குண்டுக்கட்டாக தூக்கி சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்ற கோரி இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளதோடு இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று நாளை விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.
நாளை நடைபெறும் விசாரணையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சென்னை ஐகோர்ட்டின் முடிவை தெரிந்து கொள்ள தமிழக மக்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.

More News

கடந்த வார சென்னை பாக்ஸ் ஆபீஸ் விபரங்கள்

ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்களின் சென்னை வசூல் குறித்து பார்த்து வருகிறோம் அல்லவா. அந்த வகையில் இந்த வார சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

விஜய்யின் எளிமையை பார்த்து வியந்த நியூசிலாந்து நடிகை

இலங்கையை பூர்வீகமாக கொண்டு நியூசிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்த இளம்பெண் சஜா என்பவர் தற்போது கோலிவுட்டில் நாயகியாகியுள்ளார் தமிழ்ப் பெண்ணான இவர் கோலிவுட் குறித்தும், விஜய்யின் எளிமை மற்றும் விஜய்சேதுபதியின் கடின உழைப்பு ஆகியவை குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

சென்னை பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து முதலிடத்தில் சூர்யாவின் 'சி3'

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் கடந்த வார இறுதி சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

'டிடி' நடிப்பை பார்த்து ஆச்சரியம் அடைந்த தனுஷ்

பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி என்ற திவ்யதர்ஷினி தனுஷ் இயக்கும் 'பவர் பாண்டி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தோனியின் திடீர் விலகல் முடிவு. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய தல தோனி, தற்போது திடீரென ஐபிஎல் போட்டி தொடரில் புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.