முத்துராமலிங்கம் படத்தை உடனடியாக நிறுத்த சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,March 01 2017]

கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் ராஜதுரை இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் 'முத்துராமலிங்கம். இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று திடீரென இந்த படத்தை நிறுத்துமாறு திரையரங்குகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் விஜய்பிரகாஷ் என்பவர், எம்.வி.பிரகாஷ் என்பவரிடம் வாங்கியிருந்த ரூ.29 லட்சம் கடனை திருப்பி தரவில்லை எனக் கூறி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் 'முத்துராமலிங்கம்' படத்தை தடை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடன் தொகையை வட்டியுடன் திருப்பித் தந்துவிட்டு படத்தை திரையிட உத்தரவிடப்பட்டுள்ளதால் இன்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பணம் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஓபிஎஸ் வீட்டின் முன் பேசிய ஜெயலலிதா ஆவி. சாமியார் ஏற்படுத்திய பரபரப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது ஆன்மாவின் ஆணைக்கேற்ப அனைத்து உண்மைகளையும் கூறியதாக சென்னை மெரீனாவில் மெளனத்தை ஓபிஎஸ் எப்போது கலைத்தரோ அதும்முதல் பலர் ஜெயலலிதாவின் ஆவி, ஆன்மா பேசியதாக தங்கள் கருத்துக்களை (கதைகளை) கூறி வருகின்றனர்.

துரைமுருகனை சிரிக்க வைத்த ஜெயலலிதா- ஓபிஎஸ் சொல்லும் சுவாரஸ்யம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருந்தபோது, திடீரென அவரை சசிகலா ராஜினாமா செய்ய வற்புறுத்தினார் என்பது தெரிந்ததே

அர்னாப் தலைமையிலான சேனலில் இணையும் தமிழக செய்தியாளர்

டைம்ஸ் ஆப் இந்தியா புகழ் அர்னாப் கோஸ்வாமி 'ரிபப்ளிக்' என்ற ஆங்கில தேசிய சேனலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த சேனலில் தமிழ் செய்தி சேனல் தந்திடிவியின் முன்னணி செய்தி ஆசிரியரான ஹரிஹரன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜனாதிபதியுடன் ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள் சந்திப்பு. கோரிக்கைகள் என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா ஆதரவு அணி 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்து கொண்டாலும், ஓபிஎஸ் அணிக்கு 11 எம்.எல்.ஏக்கள் மற்றும் 12 எம்பிக்களின் ஆதரவு உள்ளதால் வலுவாக அணியாக காணப்படுகிறது.

விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்க பணம் கட்டி டோக்கன் வாங்கும் தொண்டர்கள்

பிரபல நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகின்றார்.