சம்மர் வரப்போகுது.. இந்தமுறை சாதாரணமா இருக்காது..! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.

  • IndiaGlitz, [Friday,February 28 2020]

இந்த ஆண்டு கோடை காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் வெப்பநிலை வழக்கமான அளவே இருக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும், கோடை மற்றும் குளிர் தொடர்பான பருவகால வானிலை முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பருவமழைக்கு முந்தைய காலமான கோடை காலத்தில் (மார்ச், ஏப்ரல், மே) வெப்பநிலை எப்படி இருக்கும் என்பது குறித்த முன்னறிவிப்பை நேற்று வெளியிட்டது.

அதில், இந்த ஆண்டு கோடை காலத்தில், நாட்டின் வட மேற்கு, மேற்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகள், தென்னிந்தியாவின் சில பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் வழக்கத்தை விட உயர வாய்ப்புள்ளதாகவும், அது வெப்ப அலையாக மாறவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியது வெப்பநிலை தொடர்பான இந்த அறிவிப்பு அடுத்து வரும் 3 மாதங்களுக்கானதாகும். இதில் உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, கோவா, குஜராத், கடலோர கர்நாடகம், கேரளா, வட கர்நாடகத்தின் உள்பகுதிகளில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும் என்றும், இதர பகுதிகளில் இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே தமிழகத்தில் கோடை காலத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். அதனால் பொதுமக்கள் யாரும் வெப்பநிலை உயர்வு தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை. வெப்பநிலை உயர வாய்ப்பிருந்தால், அது தொடர்பாக உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

More News

சீனாவில் மட்டுமல்ல.. ஈரான், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி என பரவும் கொரோனா வைரஸ்..!

ஈரான் துணை அதிபர் மசூமே எப்டருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் இதுவரை 245 பேர் இந்த வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் பணியிடமாற்றம் செல்லாது..! உயர்நீதிமன்றம்.

போராட்டத்தில் ஈடுபட்டதாக அரசு மருத்துவர்களை பணிமாற்றம் செய்து, அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்தியாவின் புதிய பவர்  “ரன் மெஷின்“ சபாலி வர்மா

சமீபத்தில் மல்யுத்த போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட டங்கல் படத்தில் வரும் ஒரு காட்சியில், நடிகர் அமீர்கான் தனது ம

1979 முதல் சினிமா டிக்கெட்டுக்களை சேகரித்து வைத்துள்ள முதியவர்!

சினிமா என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு பெரிய மோகம் என்றும் தமிழக மக்களின் பொழுது போக்குகளில் மிக முக்கியமானது என்றும் கூறலாம்.

'சூரரை போற்று': மோகன்பாபு கேரக்டர் குறித்த முக்கிய தகவல்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய 'சூரரை போற்று'திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு கட்டத்தில் உள்ளது.