விஷால் சஸ்பெண்ட் விவகாரம்: தயாரிப்பாளர் சங்கத்திற்கு நாளை வரை கெடு
- IndiaGlitz, [Thursday,February 02 2017]
தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், சங்கத்தின் நிர்வாகத்தை சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திலும் பல சீர்திருத்தங்கள் செய்ய விரும்பினார். ஆனால் அவர் கொடுத்த பேட்டி ஒன்றை அடிப்படையாக வைத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் சற்று முன் அதிரடி அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதன்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நாளைக்குள் நடிகர் விஷாலை உறுப்பினராக மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு சேர்த்துகொள்ளவில்லை என்றால் சென்னை ஐகோர்ட்டே இதுகுறித்த உத்தரவை பிறப்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு காரணமாக எந்த நேரமும் விஷாலின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும் தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.