மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,September 05 2017]

சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவி வளர்மதி கடந்த மாதம் கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால் முதலாமாண்டு படிக்கும் இந்த மாணவி கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தில் இருந்து நீதிமன்றம் விடுவித்தால் அவர் மீது பிறப்பிக்கப்பட்ட இடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்படும் என்றும் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தன்மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து வளர்மதி தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. இன்றைய விசாரணைக்கு பின்னர் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் வளர்மதி மீண்டும் கல்லூரியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சினேகன் தந்திரக்காரர் மட்டுமே! தைரியசாலி இல்லை: காஜல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய காஜல், வெளியே வந்த பின்னர் அளித்த பேட்டியில் சினேகன் குறித்துதான் அதிகம் குறைகூறியுள்ளார்...

நான் ஏன் கெட்டவனாக மாறினேன்: ஜூலியிடம் சினேகன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 71வது நாளை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று புதிய தலைவரும், எவிக்சன் நாமினேசனும் நடந்தது. புதிய தலைவராக வையாபுரி தேர்வு செய்யப்பட்டார்...

அருண்ராஜா காமராஜ் கிரிக்கெட் படத்தில் பிரபல கிரிக்கெட் வீராங்கனை

பாடகர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் பெண்கள் கிரிக்கெட் குறித்த ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த ஆடிசன் நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஓவியாவின் ஒற்றை வரி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட ஓவியாவுக்கு ஆதரவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த ஒரு டுவிட்டர் பதிவுக்கு முன்னணி நடிகர்களின் பதிவுகளை விட அதிக வரவேற்பு இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம்: நீதிமன்றம் உத்தரவு

வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டினர் உரிமை வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த நடைமுறை செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தவறும் பட்சத்தில் ரூ.500 அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் இதனை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன் சென்ன