குஷ்பு வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Wednesday,March 01 2017]
முன்னாள் நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்ததை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் இன்று அதிரடி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குஷ்புவின் பாஸ்போர்ட் வரும் 2022ஆம் ஆண்டு வரை செல்லும். இருப்பினும் அதில் புதிதாக ஸ்டாம்ப் ஒட்ட குஷ்பு பாஸ்போர்ட் அலுவலக அதிகாரியை அவர் அணுகியபோது, அவர் மீது மூன்று கிரிமினல் வழக்கு இருப்பதால் ஸ்டாப் ஒட்ட அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது குஷ்பு மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் குஷ்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 'இது குறித்து கீழ் நீதிமன்றத்தை அணுகுமாறு குஷ்புவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்புக்கு பின்னர் குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியபோது, 'என் குழந்தைகள் இங்கு தான் படிக்கிறார்கள். அவர்களை விட்டு நான் என்ன ஓடியாப் போகப் போறேன். தொடர்ந்து 25 ஆண்டுகளாக வரி செலுத்தும் நான் நாட்டை விட்டு ஓடமாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்சனைக்கு பின்னால் அரசியல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.